பம்பலப்பிட்டி, லோரன்ஸ் மாவத்தை வாகன நிறுத்துமிடத்தில் தமிழ் நபர் ஒருவரிடம் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் கையில் கைவிலங்கு போட்டு அவர் பயணித்த மோட்டார் வாகனத்தை கடத்தி, 5 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான நகை மற்றும் 30ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
திம்பிரிகஸ்யாய பிரதேசத்தை சேர்ந்த நபர் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்து வாகனத்தை நிறுத்த தயாரான போது பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து வந்த நபர் ஒருவர் தான் பொலிஸ் அதிகாரி என கூறி திருமண நிகழ்வுக்கு வந்த நபரின் கைகளுக்கு பின்பக்கமாக விலங்கு போட்டு வாகனத்தின் பின் பக்க ஆசனத்தில் அமர வைத்துள்ளார். சிறிது தூரம் வாகனத்தை ஓட்டிச் சென்று மோதிரம் மற்றும் கைச்சங்கிலியை கொள்ளையடித்துள்ளார்