மாணவர் சமூகம் பாதிக்கப்படுவதனை தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சேர்.ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இந்த ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
அரசாங்கத்திற் புறம்பாக பல்கலைக்கழகங்களை நிறுவுவதனை எதிர்ப்பது துயரம் மிகுந்தது என்பதுடன் பாரிய குற்றமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் இவ்வாறான குறுகிய எண்ணங்களுடன் செயற்பட்டால் அது மாணவர் சமூகங்கள் பலவற்றை பாதிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு மாணவர்கள் பாதிக்கப்படுவதனை தாம் அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு துரித கதியில் அபிவிருத்தி அடைய வேண்டுமாயின் உயர் கல்வியில் விரிவான மாற்றம் செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய கல்வி முறைமையானது உலகின் ஏனைய கல்வி முறைமைகளுக்கு பொருத்தப்பாடுடையதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கல்வி முறைமை 21ம் நூற்றாண்டுக்கு பொருந்தக்கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி முறையில் மாற்றம் செய்து நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச்செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.