சுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 4,892 பேர் பாதிக்கப்பட்டதோடு 9 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸில் இதுவரை மொத்தமாக 10இலட்சத்து 96ஆயிரத்து 476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11 ஆயிரத்து 736 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுவிஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 2 இலட்சத்து 870 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 261 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுவிஸில் 4,177 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 8இலட்சத்து 83ஆயிரத்து 870 பேர் குணமடைந்துள்ளனர்.