கோவிட்-19 வைரஸ் தொற்று நோய்க்கு தடுப்பூசியாக வழங்கப்படும் எஸ்ட்ரா செனேகா (Astrazeneca vaccine) தடுப்பூசி காரணமாக குருதி உறைதல் (Blood clots) ஏற்படும் என பிரித்தானியாவின் காடிஃப் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் கூட்டு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
மேற்படி ஆராய்ச்சி அறிக்கைக்கு அமைய இந்த நிலைமை குறித்து ஆராய்வதற்காக பிரித்தானியா விஞ்ஞான ரீதியான இரகசிய பரிசோதனையையும் நடத்தியுள்ளது.
இவ்வாறு குருதி உறைதல் ஏற்படுவது அரிதான சம்பவமாக இருந்தாலும் பிரித்தானியாவில் 500 லட்சம் எஸ்ட்ரா செனேகா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பின்னர், குருதி உறைதல் காரணமாக 73 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியை பெற்றுக்கொண்ட நபர்களின் கல்லீரல் மற்றும் நரம்புகளில் குருதி உறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தமது அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளனர்.