சிங்கப்பூரில் கோவிட் மானியம் பெற மோசடி செய்த இந்திய பெண்ணுக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜகோபால் மாலினி (வயது 48) எனும் பெண் கோவிட் மானியத்தை பெறுவதற்காக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதுடன்,கட்டுமான நிறுவனத்தில் இருந்து 4,000 சிங்கப்பூர் டொலரை கையாடல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ராஜகோபால் மாலினியை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
அவர் மீதான வழக்கு விசாரணை சிங்கப்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்,ராஜகோபால் மாலினி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்து இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.