பண்டிகைக் காலங்களில் மொத்த விற்பனை, சலுகைகள் என பல்வேறு பெயர்களின் காலாவதியான பொருட்கள் மற்றும் பாவனைக்கு உதவாத பொருத்தமற்ற பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோசடி, மற்றும் மோசடி வர்த்தகர்களினால் பாவனையாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை தடுக்கும் வகையில் எதிர்வரும் பண்டிகை காலங்களில் சோதனைகளை தீவிரப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த நிலையில் பண்டிகைக் காலங்களில் கடைகள் சோதனையிடப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.