நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கு மேல் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் இரவில் அல்லது மாலை வேளையில் 75 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட ஓரளவு பலத்த மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனி மூட்டம் நிலவும் என மேலும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.



















