இலங்கை மேல் நீதிமன்ற சங்க உப தலைவராக நீதிபதி இளஞ்செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மேல் நீதிமன்ற சங்க தேர்தல் இன்று கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
இத்தேர்தலில் நீதிபதி இளஞ்செழியன் சங்க உப தலைவராக ஏகமனதாக போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த இலங்கை மேல் நீதிமன்ற சங்க உப தலைவர் பதவி ஓராண்டு கால பதவி என்பதும் குறிப்பிடத்தக்கது.


















