கோவிட் சுனாமி ஒன்றை தடுக்க முன்னெச்சரிக்கை செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்
ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் கிறிஸ்மஸூக்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுள்ளார்.
பூஸ்டரை பெற்றுக்கொள்ளாதுபோனால் கோவிட் சுனாமி ஏற்படுவதை தடுக்கமுடியாது என்று அவர் எச்சரித்துள்ளார்.
30 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
இந்தநிலையில் மூன்றாம் அல்லது பூஸ்டர் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















