நாட்டில் நிலவி வரும் அந்நிய செலாவணி கையிருப்பு பிரச்சினை காரணமாக இறக்குமதிக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நேற்றிரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், எரிபொருள், மருந்துப்பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் மற்றும் கைத்தொழில்களுக்கான மூலப்பொருட்கள் என்பனவற்றை இறக்குமதி செய்ய முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நாடுகளிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தாம் இந்தியாவிற்கு விஜயம் செய்து அந்நாட்டு அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.