அமெரிக்காவில் கென்டக்கி மாநிலத்தில் 100 ஆண்டுகள் பழமையான தேவாலயம் ஒன்று சூறாவளியால் அழிந்து நாசமாகியுள்ளது.
அமெரிக்காவில் கென்டக்கி மாநிலத்தில் வீசிய பலத்த தொடர் சூறாவளியில் மேஃபீல்ட் குரு நகரத்திலுள்ள 100 ஆண்டுகள் பழமையான யுனைடெட் மெதடிஸ்ட் தேவாலயம் அழிந்து நாசமாகியுள்ளது.
மேலும், பெரும்பாலான பெரிய கட்டிடக் கட்டமைப்புகளும் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. 1920 ஆம் ஆண்டு முதல் நகரத்தில் இருந்த மேஃபீல்ட் முதல் ஐக்கிய மெதடிஸ்ட் தேவாலயம் முற்றிலும் அழிக்கப்பட்டது.
பிரதான தேவாலயப் பகுதியில், ஒரு சில இருக்கைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. தேவாலயத்தின் மேற்கூரை முற்றிலும் பிடுங்கப்பட்டதால், கட்டிடம் இடிந்து விழும் அபாயத்திலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தேவாலயம் 1833 இல் நிறுவப்பட்டுள்ளது. 1856 ஆம் ஆண்டில், சபை கறை படிந்த கண்ணாடியுடன் ஒரு பெரிய கட்டிடம் கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து தேவாலயம் மேஃபீல்டில் வழிபாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரே கட்டிடமாக மாறியது.
தற்போதைய கட்டிடம் 1915 இல் வடிவமைக்கப்பட்டு 1920 இல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கென்டக்கி மாநிலத்தில் சூறாவளியால் ஒரு மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் உட்பட 80 பேர் உயிரிழந்துள்னர். மேலும் இறப்பு எண்ணிக்கை 100 க்கு மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.