ஜப்பானில் கரப்பான் பூச்சியிலிருந்து பீர் தயாரிப்பது பலரையும் முகம்சுழிக்க வைத்துள்ளது. பொதுவாக மனிதர்கள் அருந்தும் சில பானங்களின் மூலப்பொருட்கள் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சீனா போன்ற நாடுகளில் பூச்சிகள், ஈக்கள் என்பது அவர்களின் உணவுக் கலாச்சாரத்தில் ஒரு பகுதியாக இருந்து வருகின்றது. இவ்வாறு பூச்சிகளை உண்பது அருவருக்க செய்யும் நிகழ்வாக நீங்கள் நினைத்தால, கரப்பான் பூச்சியில் இருந்து தயாரிக்கப்படும் பீர் பற்றி தெரிந்தால் நிச்சயம் முகம் சுழிப்பீர்கள்.
ஆம் ஜப்பானில் கரப்பான் பூச்சியில் இருந்து பீர் தயாரிக்கப்படுகிறது. ஜப்பானில் ‘கபுடோகாமா’ எனப்படும் பாரம்பரிய முறையில் வடிகட்டப்படும் இந்த பீர் தனிச்சிறப்பு பீர் என்று கூறப்படுவதுடன், 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து இந்த பிரத்யேக பீரை ஜப்பானியர்கள் குடிக்கின்றனராம்.
இந்தியாவில் கரப்பான் பூச்சி என்றால் முகம்சுழிக்கும் மக்கள் தான் அதிகம். ஆனால் ஜப்பானில் உள்ளவர்கள் இந்த பானத்தினை மிகவும் விரும்பி குடிக்கின்றனர். இந்த கரப்பான் பீர், Insect Sour அல்லது Konchu Sour என்று அழைக்கப்படுகிறது.
நன்னீரில் காணப்படும் கரப்பான் பூச்சிகளால் இந்த பானம் தயாரிக்கப்படுகிறது. இவை, மற்ற பூச்சிகள் மற்றும் மீன்களுக்கு உணவளிக்கின்றன.
இந்த கரப்பான் பூச்சிகளை பிடித்து, அவற்றை வெந்நீரில் வேகவைத்து மூன்று முதல் நான்கு நாட்கள் வரை வைத்த பிறகு, அதிலிருந்து எடுக்கும் சாறு, பீராக மாற்றப்படுகிறது.