பிரித்தானியாவில் ஒமிக்ரோன் திரிபின் விரைவான பரவலினால், கோவிட் தொற்றுடன் தொடர்புடைய இறப்புகள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய சுகாதார செயலாளர் சஜிட் ஜாவிட் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
லண்டனில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களில், 44 சதவீதத்தினருக்கு இந்த திரிபு தொற்றி இருக்கலாம். இந்நிலையில், அடுத்த ஓரிரு நாட்களில், இந்த நிலைமை மேலும் தீவிரமடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.