இலங்கைக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டுள்ள சமையல் எரிவாயு கொள்கலன்களை இறக்கவேண்டாம் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை லிட்றோ எரிவாயு நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
புதிதாக சந்தைக்கு விநியோகிக்கப்படுவதற்காக கொண்டு வரப்படும் எரிவாயு கொள்கலன்களின் உள்ளீட்டு கலவைகள் இலங்கை தரநிர்ணயத்துக்கு உட்பட்டவையல்ல என்ற காரணத்தினால் அவற்றை கப்பலில் இருந்து இறக்கவேண்டாம் என்று அதிகார சபை லிட்றோ நிறுவனத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளது.



















