கூகுள் குரோம் (Google Chrome) பாதிப்புகளை பற்றி இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் பயனாளர்களுக்கு ஒரு பெரிய எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
அதன் படி, குறிப்பிட்ட கம்ப்யூட்டரை இலக்காக கொண்டு ரிமோட் அட்டார்கர்ஸ் தாங்கள் நினைத்ததை செயல்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட கணினியில் உள்ள தனிப்பட்ட தகவல்களை அவர்களால் எளிதில் பெற முடியும். இந்த சிக்கல்களை சரிசெய்ய கூகுள் ஏற்கெனவே சாஃப்ட்வர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
பயனர்கள் தயவு செய்து கூகுள் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்துகொள்ளுமாறும் இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் (Indian Computer Emergency Response Team) எச்சரிக்கை விடுத்துள்ளது.
22-வகையான பாதுகாப்பு குறித்த பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு லேட்டஸ்ட் குரோம் (chorme) அப்டேட் வெளியிடப்பட்டுள்ளதாக கூகுள் குரோம் தெரிவித்துள்ளது.




















