இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெறப்போவதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியில் சமீப நாட்களாகவே பல்வேறு பிரச்சினைகள் சென்றுக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் விராட் கோலியின் கேப்டன்சி பிரச்சினையும், அவர் தென்னாப்பிரிக்கா அணியில் விளையாட மாட்டார் எனவும் தகவல்கள் வெளியாக மறுபக்கம் ரோகித் சர்மா காயம் காரணமாக டெஸ்ட் போட்டி ஒரு நாள் போட்டியில் இருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில், இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா அடிக்கடி காயம் காரணமாக போட்டியில் விளையாட முடியாதது ரசிகர்களை சோகத்தி ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில், ஜடேஜா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இதைப்பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை… 56 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஜடேஜா, 2145 ரன்கள் அடித்துள்ளார்.
மேலும், 223 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.



















