மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை – உயரப்புலம் பகுதியில் வசிக்கும், நல்லூர் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரது இல்லத்தில் நேற்று மாலை 6 மணியளவில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.
மாலை 5.45 மணியளவில் வெடிக்க ஆரம்பித்த அடுப்பு 7.30 வரையும் வெடித்துக் கொண்டிருந்ததாகவும் அதன்பின்னர் தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்து வெடிப்பினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும், மானிப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமைகளைப் பார்வையிட்டதாகவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.



















