ஜப்பான் நாட்டின் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒசாக்கா மாகாணம் கிஷிமோடோ நகரில் 8 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது.
இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் மருத்துவமனை, பாடசாலை மற்றும் பல்வேறு வணிக வளாகங்களும் செயற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது மாடியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தின்போது வணிக வளாகங்களில் இருந்த பலர் சிக்கிக்கொண்டனர்.
சம்பவத்துக்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை