நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது என வடகொரிய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
1994-ம் ஆண்டு வடகொரியாவை ஆட்சி செய்த கிம் ஜோங் இல், நாட்டை 17 ஆண்டுகள் ஆட்சி செய்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதி காலமானார்.
இதனையடுத்து, அவருடைய கடைசி மகனான கிம் ஜோங் உன் அதிபராகி, தற்போது வரையில் 3-வது தலைமுறையாக ஆட்சி செய்து வருகிறார்.
இந்தநிலையில் தமது தந்தையின் நினைவுத்தினத்தை நினைவுக்கூரும் முகமாக வடகொரிய நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது, பிறந்தநாள் விழாக்களை கொண்டாடக்கூடாது என வடகொரிய அதிபர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
கிம் ஜோங் இல் இறந்த நாளான இன்று, ஒவ்வொரு ஆண்டும் இதே நடைமுறை வடகொரியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
வழமையாக இந்த துக்கம் 10 நாட்களுக்கு கடைபிடிக்கபடும்.
எனினும் இது கிம் ஜோங் இல் இறந்து 10 – வது நினைவு ஆண்டு என்பதால் இந்த ஆண்டு 11 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று வடகொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த துக்க அனுசரிப்பின் போது பொதுமக்கள் மற்றும் தொழில்நிறுவனங்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு உணவளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.