வலிவடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை 9 மணியளவில் கீரிமலை ஜே/226,காங்கேசன்துறை மேற்கு,ஜே/223 பகுதிகளில் 21 பேருக்குச் சொந்தமான 30 ஏக்கர் காணிகளைப் படையினருக்குச் சுவீகரிக்க நில அளவைத் திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்றைய தினம் எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அளவீட்டுப் பணிகளைத் தடுத்து நிறுத்துவதற்காகக் குறித்த இடங்களில் ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
தொடர்ந்து, காணி அளவீட்டு நடவடிக்கைகளைத் தற்காலிகமாகக் கைவிட்டு நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் அவ்விடத்திலிருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.