ஒமிக்ரோன் திரிபு உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால், உலக சந்தையில் எரிபொருள் விலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் புதிய பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் எரிபொருளுக்கான தேவை குறையும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரண்ட் கச்சா எண்ணெய் பெரல் விலை 0.59 டொலர் குறைந்து 74.43 டொரலாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் ஒரு பீப்பாய் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு வீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, எரிபொருட்களின் விலையை அதிகரிக்க எதிர்பார்க்கவில்லை என தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.