தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவர்களின் ஆலோசனைகளிற்கு அமைய இந்த தீர்மானங்களை அவர் மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும் கூட்டமைப்பு சார்பில் இதுவரை இது தொடர்பில் எந்தவிதமான பேச்சு வார்த்தைகளும் வெளியாகவில்லையெனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான சூழ்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்தாலும், கூட்டமைப்பின் தலைவராக அவர் தொடர்ந்தும் நீடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை,தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தன் விலகினால் புதிதாக இணைத்தலைமைத்துவம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.