யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கு அருகில் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடி தொழில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 43பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், இவ்வாறு சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வந்ததன் பின்னர் காங்கேசன் துறை இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.