கடந்த சில வருடங்களாகவே கோவிட் தொற்றால் அதிகமாக பெண்களே வீட்டில் முடங்கியுள்ளனர்.சிலர் தொழில்களையும் இழந்து கடன் சுமையில் சிக்கி தனது வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.
இதன் காரணமாக பலரும் மன அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளதுடன்,நாளாந்தம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கிய வண்ணம் உள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் சில பெண்கள் பொழுதுபோக்கிற்காக சமூக ஊடகங்களின் பக்கம் தனது பார்வையினை திருப்பியுள்ளதுடன்,பல பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர்.
அவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பயந்து எத்தனையோ பெண்கள் தங்கள் கனவுகளையும்,எதிர்காலத்தையும் தொலைத்து நிற்கின்றனர்.