அடுத்த தேர்தலில் மக்கள் முன்னால் வருவதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் புதிய வீடு, நாடு, நாளை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் புதிய வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு மற்றும் பல வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மிகவும் கஷ்டப்பட்டு பொதுஜன கட்சியை அமைத்தார். யார் எங்கு சென்றாலும் தான் இந்த கட்சியை விட்டு செல்ல மாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் எப்படி வேலை செய்கின்றேன் என மக்களுக்கு தெரியும். நான் வேலை செய்யும் போது கட்சி, நிறம் பேதம் பார்ப்பதில்லை.
கடந்த அரசாங்கம் ராஜபக்ஷர்களை பழிவாங்கியது. முதலில் என்னை தான் பழிவாங்கியது. வேறு கூறுவதற்கு ஒன்றும் இல்லை. நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியிடம் நாட்டை வழங்க கூடாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.