இப்போதுதான் தொழிற்சங்க ஆட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இனி போக, போக என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள், நாளை (20) முதல் பணிக்குத் திரும்புவார்கள் எனவும், நிர்வாகத்திடமிருந்து எழுத்து மூல உத்தரவாதம் கோரப்பட்டுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.



















