மெனிகே மகே ஹித்த புகழ் பாடகி யொஹானி டி சில்வாவிற்கு கொழும்பில் காணித்துண்டு ஒன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை பௌத்த விவகார, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்சவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
உலக அளவில் யொஹானிக்கு கிடைக்கப்பெற்ற அங்கீகாரத்தை கௌரவிக்கும் வகையில் இந்த காணி வழங்கப்படவுள்ளது.
1996ம் ஆண்டில் உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களுக்கு பத்தரமுல்ல ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் வழங்கப்பட்ட காணிகளுக்கு அருகாமையில் யொஹானிக்கும் காணி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.