மூத்த சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் கோவிட் தொற்று காரணமாக காலமானார்.
74 வயதுடைய அவர் இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
கோவிட் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ். நீதிமன்ற பதில் நீதிவானாக நீண்டகாலம் கடமையாற்றிய அவர், யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராகவும் தனது இயலுமான காலம் வரை பதவி வகித்தவர்.
யாழ். கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த அவர் கனகரட்ணம் சட்ட நிறுவனத்தின் இயக்குனருமாவார்.