அமெரிக்காவில் ஒமிக்ரோன் தொற்றாளியின் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது
டெக்சாஸின் ஹாரிஸ் கவுண்டி என்ற இடத்தில் இந்த மரணம் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மரணமானவர், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர் என்று டெக்ஸாஸ் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த மரணம் தொடர்பில், அமரிக்க நோய் கட்டுப்பாட்டு மையமான சீடிசீ எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை
மரணமானவர் 50 க்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவராவார்
இதேவேளை அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களில் 73 வீதமானோர், ஒமிக்ரோன் தொற்றாளர்கள் என்று கடந்த வார அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.