இலங்கையில் எதிர்வரும் நாட்களில் பால்மாவின் விலையில் முறையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடம் ஒக்டோபர் மாதம் பால் மாவின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரித்து காணப்பட்டது.
எனினும் அந்த காலப்பகுதியில் இருந்ததை விட தற்போது 10 சதவீதம் விலை அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதுள்ள பால் மா தட்டுப்பாடு இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடரும் என அசோக பண்டார குறிப்பிட்டுள்ளார்.
பால் மாவை கொள்வனவு செய்வதற்கான டொலர் தட்டுப்பாடு, கடன் கடிதம் பெற முடியாமை, ஏற்றுமதியில் தாமதம் மற்றும் வரிகள் என்பன இலங்கையில் பால் மா தட்டுப்பாட்டுக்கான பிரதான காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.