தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஒமிக்ரோன் உங்களை கொல்லவும் வாய்ப்பு இருக்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
ஒமிக்ரோன் தொற்று அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது அங்கு கோவிட் கண்டறியப்படும் 73 சதவீதத்தினருக்கும் அதிகமானோருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அந்நாட்டு மக்கள் உட்பட படை வீரர்களும் தடுப்பூசி போடுவதில் தயக்கம் காண்பித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
நீங்கள் தடுப்பூசி போட வில்லை என்றால், நீங்கள் (கோவிட் தொற்று) நோய் தாக்குதலுக்கு ஆளாவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் தொற்று நோய்க்கு ஆளானால் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் உட்பட மற்றவர்களுக்கு பரப்புவீர்கள்.
நாம் அனைவரும் ஒமிக்ரோன் தொற்று பற்றி கவலை கொள்ளத்தான் வேண்டும். ஆனால் பதற்றம் அடையத்தேவையில்லை. ஆனால் தடுப்பூசி போடாத நிலையில், தொற்று ஏற்பட்டால் வைத்தியசாலையில் சேர்க்கும் நிலை வரும். மரணம் அடையவும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.