கொழும்பு, பம்பலப்பிட்டியில் முகப்புத்தகம் ஊடாக கண்டுபிடித்த நண்பனிடம் விமானப்படை சிப்பாய் ஒருவர் மோட்டார் வாகனத்தை கொள்ளையடித்துள்ளார்.
குறித்த நண்பனை மிகவும் நுட்பமாக பம்பலப்பிட்டியவுக்கு வரழைத்து அவரது 28 லட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் வாகனத்தை திருடி சென்று வாடகை வாகனமாக மாற்றிய விமாப்படையின் முன்னாள் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த சந்தேக நபர் மோட்டார் வாகனத்தில் காட்சிப்படுத்திய போலி தகடு, போலி ஆவணங்கள், அதனை தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் அனைத்தும் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 வாரத்திற்கு முன்னர் முறைப்பாட்டாளர் மற்றும் சந்தேக நபர் முகப்புத்தகம் ஊடாக அறிந்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாட்டாளரின் மகனை டுபாய் நாட்டிற்கு தொழிலுக்காக அழைத்து செல்ல உதவுவதாக கூறி இந்த கொள்ளை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தொழில் விடயமாக பேசுவதற்காக பேராதனையில் இருந்து சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட நபரும் பம்பலப்பிட்டிக்கு மோட்டார் வாகனத்தில் வருகைதந்துள்ளனர். இதன் போது உரிமையாளரை ஒரு இடத்தில் இருக்குமாறு கூறிவிட்டு சந்தேக நபர் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையிலேயே மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள