உடலில் உள்ள தேவையற்ற எடையை குறைக்க இலவங்கப்பட்டை மற்றும் தேன் பெரிதும் உதவுவதாக பிரபல ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலவங்கப்பட்டை மற்றும் தேன் ஆகியவை கொழுப்பை கரைக்கும் தன்மையை கொண்டிருக்கின்றன என்பதால், எடையைக் கட்டுப்படுத்தவும், உடல் பருமனை குறைக்கவும் இது பெரிதும் உதவும் என்கின்றனர்.
3 வகையிலான மேஜிக் பானங்கள்
இலவங்கப்பட்டை மற்றும் தேன் கலந்த பானம் : ஒன்றரை கப் தண்ணீரில் ஒரு துண்டு இலவங்கப்பட்டை சேர்த்து, 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்னர் ஒரு கோப்பையில் வடிகட்டி எடுத்து கொள்ளவும். இதனையடுத்து அதில் 2 ஸ்பூன் தேன் கலக்கவும். சாதாரண தேநீர் போல மெதுவாக பருகவும். தினமும் ஒரு கப் அருந்தலாம்.
கிரீன் டீ – இலவங்கப்பட்டை – தேன் : ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். பின்னர் அந்த தண்ணீரில் ஒரு டீஸ்பூன் Green tea சேர்த்து மீண்டும் இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும். இப்போது ஒரு கோப்பையில் கால் டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை போடவும். பிறகு அதில் இரண்டு ஸ்பூன் தேன் கலக்கவும். இப்போது தேன் மற்றும் இலவங்கப்பட்டை கொண்ட ஒரு கோப்பையில் இந்த கிரீன் டீ தண்ணீரை வடிகட்டவும். இந்த மூன்றையும் நன்றாக கலந்து சாப்பிடவும். தினமும் ஒரு கப் சாப்பிடலாம்.
இலவங்கப்பட்டை – தேன்- எலுமிச்சை : முதலில் ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீரை கொதிக்க விட்ட பின்னர் ஒரு கோப்பையில் கால் டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் போடவும். இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலக்கவும். கொதிக்க வைத்த தண்ணீரை கோப்பையில் ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அதை மெதுவாக அருந்தவும். இதை ஒரு நாளைக்கு ஒரு முறை உட்கொள்ளலாம்.