கம்பஹாவில் பாடசாலையில் மாணவனை இணைப்பதற்கு 2 லட்சம் ரூபா லஞ்சம் வாங்கிய அதிபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இச் சம்பவத்தில் கம்பஹாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாணவனை பாடசாலையில் தரம் 7 இல் இணைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிபர் 2 இலட்சம் ரூபா இலஞ்சம் கேட்டதாக மாணவனின் பாதுகாவலர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், அதிபர் அலுவலகத்தில் வைத்து சந்தேக நபரான அதிபரை பணத் தொகையை பெற்றுக் கொள்ளும்போது பொலிஸார் கைது செய்துள்ளனர். பின்னர், கைது செய்யப்பட்ட அதிபர் முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இச்சம்பவம் குறித்து இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.