அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இன்றிரவு பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இவ்வாறு உயிரிழந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த துப்பாக்கி சூட்டில் நவீனன் என்ற இளம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளதுடன்,உயிரிழந்தவரின் புகைப்படமும் சமூக வளைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதேவேளை, பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.