பிரதமர் மஹிந்த ராஜபச்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ சர்வதேச இசைக்கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செற்படும் இந்த பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவராக சென்னை சுகஜீவ பேராலயத்தில் வைத்து கடந்த (06) திங்கட்கிழமை இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் பிரபல தொழிலதிபர் வி.ஜி. பி. நிறுவனத்தின் உப தலைவரும், சுகஜீவிய பேராலயத்தின் தலைவருமான வி.ஜி.எஸ் . காடினல் செல்வராஜின் அழைப்பில் சென்ற அருட்கலாநிதி வண. பிதா எஸ். சந்ரு பெர்னாண்டோவிற்கு சிறப்பு விருதாக ‘சாதனைச் சர்க்கரவர்த்தி’ என்ற விருதும் இந்த நிகழ்வின் போது வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம், அருட்கலாநிதி வண. பிதா எஸ். சந்ரு பெர்னாண்டோவிற்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்ததோடு, ஜெரூசலேம் வேதாகமப் பல்கலைக்கழகத்தின் நினைவுச்சின்னமும் பணிப்பாளர் எ.பி. நேசரினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், எட்டோ மிஷன் இந்தியா நினைவுச்சின்னத்தை பிஷப் இஸ்ரேல் ராஜப்பா வழங்கியுள்ளார்.