இறக்குமதிகளை மேலும் வரையறுத்துக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சிற்கு பரிந்துரை செய்துள்ளது.
டொலர் கையிருப்பினை தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வாறு பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு முதலீடுகளை கூடுதலாக பெற்றுக்கொள்ளல், ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக் கொள்ளல், வெளிநாடுகளுக்கு செல்லும் அனுப்பி வைக்கப்படும் அந்நிய செலவாணியை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென நிதி அமைச்சிடம், மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் மொத்த டொலர் கையிருப்பு 1.5 பில்லியன் டொலர்கள் எனவும் இதில் 330 மில்லியன் டொலர் தங்கக் கையிருப்பு எனவும் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.