அவுஸ்திரேலியாவில் முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் மரணமாகியுள்ளார்.
இதனை அவுஸ்திரேலிய சௌத்வேல்ஸ் மாநில அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
80 வயதான ஒருவரே ஒமிக்ரோன் தொற்றால் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த மரணம் தொடர்பான கூடுதல் தகவல்களை அதிகாரிகள் வழங்கவில்லை.
மரணமானவர், முதியோர் பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்தவர் என்பதும் மருத்துவமனையில் அவர் மரணமானார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவின் நியுசௌத்வேல்ஸ், விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் திங்களன்று 9,107 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
இது, நாட்டின் புதிய தொற்றுநோய்களில் மற்றும் ஒரு உச்சநிலையாகும்