திருகோணமலை கந்தளாய் பிரதான வீதி 96ம் கட்டை பாலத்தில் சீமந்து ஏற்றிச்சென்ற லொறி மற்றும் டிப்பர் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
இவ் விபத்து இன்று (27) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து சீமெந்து ஏற்றி சென்ற லொறியும் கந்தளாயில் இருந்து வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் சீமந்து ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
குறித்த விபத்து தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.