யாழ். (Jaffna) கொழும்பு உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நிதியம் மேலும் தெரிவித்துள்ளதாவது, நேற்றைய தினம் (27) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான அளவிலும் யாழ்ப்பாணம், கொழும்பு, காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இன்றைய தினமும் (28) குறித்த இடங்களில் 58 மற்றும் 120 இற்கும் இடையில் காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, காற்றின் தரம் குறைவதால், உடல்நல பிரச்சினைகள் உள்ள நபர்கள் குறிப்பாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



















