ஜப்பான் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என ஜப்பான் தூதுவர் மிஸிகாஷி ஹய்டியெகீ தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்பு மிக்க கண்டி தலதா மாளிகையில் வழிபாடு செய்ய கிடைத்தமை பெரு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கும், இலங்கைக்கும் இடையில் மிக நீண்ட கால உறவுகள் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.