அமெரிக்கா – டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கார்லண்ட் பகுதியில் உள்ள எரிவாயு நிரப்பும் மையத்தில் வாகனமொன்றில் வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதன்போது தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை தேடி வருகின்றனர்.
அமெரிக்காவில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கிச்சூடு சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.