சுவிட்சர்லாந்தில் Johnson நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கலப்பு தடுப்பூசியும் இனி சாத்தியம் என உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் Johnson & Johnson நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசிக்கு திங்கட்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாடர்னா மற்றும் பைசர் தடுப்பூசியை ஒப்பிடுகையில் Johnson நிறுவனம் சார்பில் ஒரு டோஸ் தடுப்பூசியை மட்டுமே அறிமுகம் செய்திருந்தது. இந்த நிலையில் தற்போது பூஸ்டர் தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ளது Johnson நிறுவனம்.
மேலும், முதல் டோஸ் போட்டுக்கொண்ட 2 மாதங்களுக்கு பின்னர் Johnson நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி Johnson நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாடர்னா அல்லது பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியும் கலப்பாக போட்டுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கலப்பு தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் கண்டிப்பாக 6 மாதங்களுக்கு பின்னரே பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.