இலங்கை போக்குவரத்து சபைக்கு மேலும் 600 பேருந்துகளை கொள்வனவு செய்ய இருப்பதாக நிறுவன தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் இலாபமீட்டும் நிறுவனமாக இ.போ.சவை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான திட்டம் பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சில் தொடர்ந்து தங்கியிருக்காது அடுத்த வருடம் முதல் சுயாதீனமான நிறுவனமாக செயல்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பழைய பேருந்து வண்டிக்கு பதிலாக புதிய பேருந்து வண்டிகளை கொள்வனவு செய்வதே எமது நோக்கம் எனவும்,பேருந்து வண்டிகள் நமக்கு கிடைக்கும் வருமானத்திற்கு அமையவே தருவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு நிதி அமைச்சினால் எமக்குக் கிடைக்க வேண்டிய தொகையில் ரூபா 4,300 கோடி குறைவாகவே கிடைத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



















