தலிபான்களால் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் சில மாதகங்களுக்கு முன்பு ஆட்சியை பிடித்த தலிபான்கள் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆண் உறவினர் ஒருவரின் துணையின்றி பெண்கள் நீண்ட தூர பயணங்கள் செல்லகூடாது என தலிபாங்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தலை மற்றும் முகம் போன்றவற்றை மறைக்கும் ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும் போன்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான கட்டுப்பாடுகள் பெண்களை மேலும் அடிமைப்படுத்தும் செயல் என அந்நாட்டு பெண்கள் குற்றம்சாட்டி தலிபான்களின் அரசினை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.



















