புதிய உடன்படிக்கையின் படி திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் 50 வருட குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த இலங்கை – இந்திய எண்ணெய் தாங்கி உடன்படிக்கையானது பல மில்லியன் டொலர் பெறுமதியானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 61 எண்ணெய் குதங்கள், களஞ்சியசாலையை அபிவிருத்தி செய்வதற்காக புதிதாக அமைக்கப்பட்ட Trinco Petroleum Terminals Ltd மூலம் கூட்டாக நிர்வகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



















