கனடாவில் ஒரே நாளில் 41,210 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் தொற்று காரணமாக கனடாவில் கடந்த சில வாரங்களாக கோவிட் பரவல் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில்,கடந்த 24 மணி நேரங்களில் 41,210 கோவிட் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கோவிட் பரவல் அதிகரித்து வருகின்றமையால் கியூபெக்கில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்
அமுல்படுத்தப்பட்டுள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு 790 முதல் 4,740 அமெரிக்க டொலர்கள்
அபராதமாக விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.




















