இலங்கையில் ஒமிக்ரோன் திரிபு பரவுகை தொடர்பில் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் ஒமிக்ரோன் திரிபு பரவுகை தீவிரமடைந்துள்ள வரும் நிலையில், இலங்கையில் இதுவரையில் ஒமிக்ரோன் திரிபு கட்டுப்பாட்டுக்குள் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரையில் நாட்டில் சுமார் 48 ஒமிக்ரோன் திரிபுடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப பிரிவு பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்டானி இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, பதுளை, அனுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஒமிக்ரோன் திரிபுடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு பேணியவர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி காரணமாக ஒமிக்ரோன் திரிபு பரவுகை குறிப்பிடத்தக்களவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசியை கூடிய சீக்கிரம் ஏற்றிக்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 25 வீதமானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை எற்றிக கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.