அரச நிறுவனங்களில் அமுல்படுத்தப்பட்ட செலவு குறைப்பு நடவடிக்கைகளினால் 53 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்திய போதிலும் இந்த நெருக்கடி நிறைந்த காலத்திலும் நாம் பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல், மோசடி, வீண் விரயத்தை தவிர்த்து பணத்தை சேமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களிடம் செலவுகளை குறைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கடந்த ஆறு மாதங்களில் 53 பில்லியன் ரூபா பணம், திறைசேரிக்கு சேமித்துக் கொடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
செலவுகளை கட்டுப்படுத்தி, உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியும் என அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.