அரசாங்கத்தை விமர்சிக்கும் போது ஒழுக்கமற்ற விதத்தில் நடந்துகொள்ளவேண்டாம் என அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
இதனை அவர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டபோது தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. இதன்போது,
இராஜாங்க அமைச்சர்களும், அமைச்சர்களும் அரசாங்கத்தை கவிழ்க்கும் தனிப்பட்ட நோக்கத்துடன் செயற்படக்கூடாது எனவும் அவர் கூறினார்.
சுசில் பிரேமஜயந்த அரசாங்கத்தை விமர்சித்தமை குறித்து கடும் சீற்றமடைந்திருந்த ஜனாதிபதி , அரசாங்கத்திலிருந்துகொண்டே அரசாங்கத்தை விமர்சிப்பது ஒழுக்கமான செயலா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் எந்த அரசாங்கமும் தனது உறுப்பினர்கள் மத்தியில் ஒழுக்கத்தை பேணவேண்டும்,பொது அரங்கில் விமர்சிப்பதன் மூலம் தீர்வை காணமுடியாது எனவும் ஜனாதிபதி கோட்டாபய இதன்போது மேலும் தெரிவித்தார்.